TNROA – தமிழ்நாடு வருவாய் அதிகாரிகள் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு..

TNROA – (Tamilnadu Revenue Officials Association) தமிழ்நாடு வருவாய் அதிகாரிகள் சங்கம்  20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19-06-2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.
இன்று 16.06.18 சனிக்கிழமை தூத்துக்குடி யில் TNROA மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்  20 அம்ச கோரிக்கைகள் குறித்தும், அரசின் நிலைபாட்டை குறித்தும் மிகவும் விரிவாக விவாதத்தினை முடித்து இறுதியில் 19.06.18 செவ்வாய் முதல் ஏற்கனவே திட்டமிட்டு கள பணியாற்றியும், பிரச்சாரத்தையும் முடித்துள்ள நிலையிலும், அரசிடமிருந்து எவ்விதமான அசைவும் இல்லாத நிலையில்  வாழ்வாதார/நீண்ட நாள் கோரிக்கைகளுக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களையும் இழுத்து மூடி அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரையில் முழுமையாக பங்கேற்கும் என அறிவித்துள்ளனர்.
மேலும் இக்காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் 19.06.18 முதல் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!