இராமநாதபுரத்தில் 16/02/2019 ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மாதிரி தேர்வு சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி நடத்துகிறது.

இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் டிஎன் பிஎஸ்சி குரூப்-2 முதன்மை நேர்காணல் தேர்வுக்கான மாதிரி தேர்வு 16/02/19 ல் நடைபெறுகிறது என சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தெரிவித்தார். இராமநாதபுரத்தில் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி, கடந்த 3 ஆண்டுகளாக கல்வி சேவை செய்து வருகிறது. அரசுப் பணியில் சேர ஏராளமானோருக்கு உதவி வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற பலர் அரசு அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். 2018 இல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சியடைந்த 113 பேர் அரசு பணியில் உள்ளனர். அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வோருக்கு பல மாதிரி தேர்வுகளை தேர்வை வெல்வது எளிது என தன்னம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது.

இதன்படி, சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மை தேர்வு நேர்காணலுக்கான மாதிரி தேர்வு 16/02/2019 இல் நடத்தப்படுகிறது. போட்டி தேர்வை எதிர்கொள்வோருக்கு இந்த மாதிரி தேர்வு பயனுள்ளதாக அமையும் என்பதால் விண்ணப்பதாரர்கள் பங்கேற்று பயன்படுத்தி கொள்ளலாம். மாதிரி தேர்வில் கலந்து கொள்வோருக்கு சுரேஷ் அகாடமி சார்பில் பாட குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள் பற்றிய விரிவான விளக்கங்கள், விடைகளுடன் கூடிய கையேடு இலவசமாக வழங்கப்படும். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் இரு பாலருக்கும் விடுதி வசதி செய்துதரப்படும். மாதிரி தேர்வில் பங்கேற்க முன்பதிவு அவசியம். போட்டா -2, ஹால் டிக்கெட் கொண்டு வர வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 75503 52916, 75503 52917 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல், ராமநாதபுரம் கிளை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!