இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 16.05.2017 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக, மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும். தொகுதி-II A (GROUP IIA) நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான குறிப்புகளை வழங்கினார்.

பயிற்சி வகுப்பினைத் துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளர், நேர்முக எழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்காக தொகுதி-II A (GROUP IIA) நிலை அலுவலர் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடப்பாண்டில் 1,953 பணியிடங்களுக்குதொகுதி-II A (GROUP IIA) நிலை அலுவலர் பணியிடங்களுக்கு 06.08.2017 அன்று தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வினை இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் எளிதில் எதிர்கொண்டு வெற்றி பெற ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தொகுதி-II A (GROUP IIA) நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் என இரண்டு பிரிவுகளாக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக பொது அறிவைப் பொறுத்த வரை இந்திய பொருளாதாரம், அரசியல், நாட்டு நடப்புகள், பொது அறிவியல், புவியியல், வரலாறு உள்ளிட்ட பிரிவுகளுக்கும் பொது தமிழ் ஃ பொது ஆங்கிலம் பொறுத்தவரை இலக்கியம்ää இலக்கணம்ää உரைநடைää செய்யுள் உள்ளிட்ட பிரிவுகளுக்கும் முக்கியமத்துவம் வழங்கப்பட்டு தேர்ந்த பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வகுப்பில் கலந்து கொண்டுள்ள இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பினை முழுமையாக பயன்படுத்தி நடைபெறவுள்ள தொகுதி-II A (GROUP IIA) நிலை அலுவலர் பணியிடத்திற்கான தேர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் மு.அபுபக்கர் சித்திக் பயிற்றுநர் மாதவன் உள்பட அரசு அலுவலர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









