இருப்புப் பாதை காவலர்களுக்கு வெகுமதி..

தமிழ்நாடு இருப்புப் பாதை காவல் பிரிவில் சிறப்பான முறையில் பணியாற்றிய காவலர்களை பாராட்டி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் சங்கர் ஜிவால், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். தமிழ்நாடு இருப்புப் பாதை காவல் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை பிரிவு தேச பாதுகாப்பு குற்றத் தடுப்பு, சட்ட விரோத கடத்தல், நுண்ணறிவு தகவல் சேகரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ரயில் நிலையங்கள் மற்றும் தொடர் வண்டிகளில் நடைபெறும் குற்றங்கள் எனப் பல வகையான குற்றங்களைத் தடுக்கும் மற்றும் கண்டறியும் பணியை மிகச் செவ்வனே செய்து வருகிறது.

தமிழ்நாடு இருப்புப் பாதை காவல் பிரிவு குறித்த செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக செய்திமடல் ஒன்று வெளியிப்படுகிறது. இந்த செய்தி மடலை (News Letter) காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் சங்கர் ஜிவால் வெளியிட அதனை சென்னை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் B. விஸ்வநாத் ஈர்யா, IRSE, பெற்றுக் கொண்டார்.

 

இந்த செய்தி மடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் இருப்புப் பாதை காவல் பிரிவில் சிறப்பான முறையில் பணியாற்றி வழிப்பறி மற்றும் திருட்டு குற்றங்களை கண்டு பிடித்தவர்கள், இரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை அதிக அளவில் கண்டு பிடித்தவர்கள் மற்றும் நீண்ட நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தின் குற்றவாளிக்கு எதிரான பிணையில் வர முடியாத பிடியாணையை நிறைவேற்றியது போன்ற நற் பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் படைத் தலைவர் சங்கர் ஜிவால், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

இந்த நிகழ்ச்சியில் K. வன்னிய பெருமாள் (காவல் துறை இயக்குநர், இருப்புப் பாதை),  A.G.பாபு (காவல் துறை தலைவர் இருப்புப் பாதை), I. ஈஸ்வரன் (காவல் கண்காணிப்பாளர், சென்னை), காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!