தென்காசி மாவட்டத்தில் விதைப்பந்து புரட்சி; தமிழக ஆளுநர் பாராட்டு..

குற்றாலம் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தென்காசி மாவட்டத்தில் விதைப்பந்துகள் தயாரிப்பு புரட்சியில் ஈடுபட்டுள்ள சமூக நல இயற்கை ஆர்வலர்கள் வெங்காடம்பட்டி பூ. திருமாறன், மூத்த சுற்றுச்சூழல் பிரசங்கியார் டாக்டர். விஜயலட்சுமி, காங்கிரஸ் பாரம்பரிய ராமோகன் ஆகியோரை அழைத்து பாராட்டினார். தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இருந்து “விதைப்பந்து புரட்சி” துவங்கியுள்ளது. உலகம் முழுக்க சுற்றுச்சூழலை, மரங்களைக் கொண்டு பசுமையை பாதுகாக்கும் பணியில் தென் தமிழகத்தில் பசுமை ஆர்வலர் பூ. திருமாறன் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். ஒரு மண் உருண்டையில் நான்கு ஐந்து விதைகளை வைத்து உருட்டி, காயவைத்து எங்காவது ஏரி, குளக்கரை, கால்வாய், வனப்பகுதி, வானம் பார்த்த பூமியில் எறிந்து விடுவதே மரங்களை தோற்றுவிக்க எளிய வழியாக உள்ளது. இந்த விஷயத்தை பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரைக் கொண்டு செய்ய வைக்கும் வித்தையைக் கேள்வியுற்ற தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்தார்.

விதைப்பந்து தயாரிப்பு முறை, உள்ளே வைக்கப்படும் மரவிதைகள், அதன் எண்ணிக்கை, அது எப்படி எப்போது முளைக்கத் தொடங்குகிறது, போன்ற விவரங்களை பூ. திருமாறன் கவர்னருக்கு ஆங்கிலத்தில் விளக்கி கூறினார். நன்றாக கவனித்த தமிழ்நாடு கவர்னர் உங்கள் எண்ணம் மற்றும் பணி எனக்குப் புரிகிறது. முளைத்தவரை லாபம், வளர்ந்த வரை மிச்சம் இதில் ஈடுபடும் பள்ளிகள், கல்லூரிகள் அங்கு படிப்போருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். விதைப்பந்துகளுடன் விஜயலட்சுமி, ராம்மோகன், திருமாறன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பல லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கப்பட்டு விதைக்கப்பட்டு வருகின்றன. பல லட்சம் சான்றிதழ்கள் இதற்காக வழங்கப்பட்டுள்ளன என மதுரை பாலு தெரிவித்தார். இப்போது நடைபெறும் பசுமை வேலையின் பலனை இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்த சமுதாயம் அனுபவிக்கும் என நன்னன் தெரிவித்தார். விதைப்பந்து பணியை அடையாளம் காட்டிய கவர்னருக்கு ராம் மோகன், சவுதி பார்த்திபன், வீசெர்வ் விஜயராகவன் மற்றும் சாந்தி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!