இனி இ- சேவையில் பெரும் சேவைகளை நாமே நேரடியாக பெறலாம் – அரசு அதிரடி – Open Portal அறிமுகம்..

தமிழ்நாட்டில் ஈ சேவை மையம் இருந்தாலும், பல இடங்களில் அது “ஈ” மொய்க்கும் “மய்யம்” ஆகவே இருந்தது.  ஆகையால் கிராமப்புற மக்கள் மட்டும் அல்லாமல் நகரத்து மக்களுக்கும் நேரமும், பொருளாதாரமும் விரயம் ஆனது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இனி இ- சேவையில் பெரும் சான்றிதழ், விண்ணப்பகங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  அதாவது அரசு மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு திறந்த தளம்  (OPEN PORTAL) ஒன்று  www.tnesevai.tn.gov.in என்ற இணைய முகவரியில்  உள்நுழைந்து citizen login ஐ தேர்தெடுத்து சுயவிவரங்களை பதிவு செய்து user name and password, உருவாக்கி வருவாய்துறை  சம்மந்தமான சான்றிதழ்களை பதிவு செய்யலாம்.
இந்த பதிவுக்கு ஒரு சான்றிதழ்க்கு ரூ67  கட்டணமாக  இன்டர்நெட் பேங்க் மூலம்  பணி பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்த சேவை 92 வகையான சேவைகளை பெற முடியும்.  இன்னும் சில மாதங்களில் இந்த சேவை மூலம் பெறலாம் என தெரிகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!