ராமநாதபுரம் மாவட்டம், தனியார் மஹாலில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் 34வது ஆண்டு பேரவை கூட்டம் திட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. முக்கியமாக, மின்துறையை பொது துறையாகவே பாதுகாக்க வேண்டும் என்றும், வரவிருக்கும் மின்சார சட்ட திருத்த மசோதா 2026-ஐ அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும், 60,000-க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்றும், கணக்கீடு பணியாளர்கள் கணக்கிட்டு பணியாற்றிய மொபைல் மற்றும் டேப் ஆகியவற்றை பணியாளர் வாரியம் வழங்க வேண்டும் என்பதும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகள் தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டன.