கொங்கு மற்றும் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், காற்று சந்திப்பு மற்றும் காற்று முறிவு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பதிவாகும். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தஞ்சை, நாகை திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யும். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் இன்று நல்ல மழை பெய்யும். இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்கள் இன்று சிறப்பான மழையை எதிர்கொள்ளும். அடுத்த 48 மணி நேரத்தில் குற்றாலம் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.