தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.
நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு தமிழ்நாடு உள்பட நாட்டின் பல இடங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், இந்தியாவில் இன்றைய தினம் பீகார், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜார்க்கண்ட், ஒடிசா, தெலங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் வெப்ப அலை வீசி உள்ளது . இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை ஒட்டி வெயில் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த 19 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.
1.) சென்னை – 39°C / 102.20°F
2.) திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் – 40.9°C / 105.63°F
3.) காஞ்சிபுரம் – 40.7°C / 105.26°F
4.) விழுப்புரம் மாவட்டம் மயிலம் – 38.9°C / 102.02°F
5.) ராணிப்பேட்டை மாவட்டம் கலவை – 40.5°C / 104.90°F
6.) வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் – 41.8°C / 107.24°F
7.) திருப்பத்தூர் – 40.2°C / 104.36°F
8.) திருவண்ணாமலை – 39.8°C / 103.64°F
9.) கள்ளக்குறிச்சி – 40.8°C / 105.44°F
10.) கடலூர் மாவட்டம் சிதம்பரம் – 40.7°C / 105.26°F
11.) திருவாரூர் – 39.1°C / 102.38°F
12.) புதுக்கோட்டை மாவட்டம் வாம்பன் – 40.2°C / 104.36°F
13.) கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா அலுவலகம் – 40.3°C / 104.54°F
14.) திருச்சி மாவட்டம் சிறுகமணி – 39.7°C / 103.46°F
15.) சேலம் மாவட்டம் சந்தியூர் – 40.6°C / 105.08°F
16.) ஈரோடு 41.5°C / 106.70°F
17.) கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் – 38.9°C / 102.02°F
18.) திருப்பூர் – 40.1°C / 104.18°F
19.) கோவை – 38.1°C / 100.58°F
20.) சிவகங்கை – 40.5°C / 104.90°F
21.) விருதுநகர் 41.6°C / 106.88°F
22.) தென்காசி – 37.9°C / 100.22°F வெப்பம் பதிவாகி உள்ளது…

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









