தமிழகத்தில் போதைப் பொருட்கள் அழிப்பு..

போதை இல்லா தமிழ்நாடு முயற்சியின் ஒரு பகுதியாக, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்களை அழிக்கும் பணி, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, தமிழ்நாடு சிஐடி பிரிவு மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி 27.12.2024 அன்று 224 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3421.500 கி.கி. உலர் கஞ்சா, அனைத்து சட்ட முறைகளையும் பின்பற்றி செங்கல் பட்டு மாவட்டம் தென் மேல் பாக்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட எரிக்கும் ஆலையில் எரிக்கப்பட்டது. 

காவல்துறை கண்காணிப்பாளர், NIB CID, சென்னை. உதவி இயக்குநர், TNFSL, சென்னை மற்றும் செங்கல்பட்டு தாசில்தார் ஆகியோர் போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருள்களை அழிக்கும் செயல் முறையை கண்காணித்தனர். போதைப் பொருள்கள் மற்றும் போதைப் பொருள்களின் சட்ட விரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்-10581 மூலம் மற்றும் வாட்ஸ்அப் எண்-9498410581 அல்லது மின்னஞ்சல் முகவரி [email protected] மூலம் பகிருமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!