தமிழ்நாடு அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அந்த குழந்தைகள் 18-வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2025 அன்று அன்புக் கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டது. மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து பாதுகாத்திடும் வகையில், அக் குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர அன்புக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000 வழங்கப்படும். பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட நடவடிகைகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 6,802 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் முதற்கட்டமாக 145 குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சரின் அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் பயனடைந்த தென்காசி மாவட்ட பயனாளிகள் தெரிவித்ததாவது,

பயனாளி ஆரிஃபா : என் பெயர் ஆரிஃபா தஸ்னீம். சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை. என்னுடைய அம்மா, அப்பா இருவரும் இறந்து விட்டார்கள். என்னுடைய பாட்டி தான் என்னை வளர்த்து வருகிறார்கள். நான் 10 ஆம் வகுப்பு படித்து முடித்து விடடு எம்.எஸ்.பி.வி.எல் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். தற்போது எனக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000 உதவித்தொகை கிடைக்கிறது. இதனால் என்னுடைய படிப்புச்செலவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு இப்பணம் மிகவும் உதவியாக உள்ளது. என்னைப் போன்ற ஏழைக் குழந்தைகளுக்கு இத்திட்டம் மிகவும் உதவியாக உள்ளது. இத்திட்டத்தை கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.
பயனாளி செல்வக்குமார் : என் பெயர் செல்வக் குமார், சொந்த ஊர் தென்காசி மாவட்டம் ஆலடிப்பட்டி. என்னுடைய அம்மா, அப்பா இருவரும் இறந்து விட்டார்கள். நான் என் அம்மாவின் உறவினர் வீட்டில் ஆவுடையானூரில் வசித்து வருகிறேன். அவர்கள் தான் என்னை படிக்க வைக்கிறார்கள். நான் தற்போது ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். தற்போது எனக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000 உதவித்தொகை கிடைக்கிறது. இதனால் என்னுடைய படிப்புச் செலவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு இப்பணம் மிகவும் உதவியாக உள்ளது. என்னைப் போன்ற ஏழைக் குழந்தைகளுக்கு இத்திட்டம் மிகவும் உதவியாக உள்ளது. இத்திட்டத்தை கொண்டு வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நன்றியை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியீடு: ஏ.எடிசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தென்காசி மாவட்டம்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

