அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. ஆளுநர் விளம்பரம் தேடும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார். அரசியல் சாசனத்தை மீறி அவர் நடந்து வருகிறார்.எனவே அவரை நீக்க ஒன்றிய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

You must be logged in to post a comment.