வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலையை விடுங்கள்! இதில் ஏதேனும் ஒரு ஆவணம் போதும்..

பாராளுமன்ற தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் சிலிப் வழங்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வாக்காளர் எவரொருவரின் ஜனநாயக உரிமையும் மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் கூடுதல் ஏற்பாடு செய்துள்ளது. வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறு எழுத்துப்பிழைகள் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிப்பதற்காக 12 ஆவணங் களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவை வருமாறு:1. ஆதார் அட்டை2. பான் கார்டு3. ரேஷன் அட்டை4. வங்கி அல்லது அஞ்சல் பாஸ்புக்5. ஓட்டுநர் உரிமம்6. பாஸ்போர்ட்7. புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம்8. புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை9. எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. அதிகாரப் பூர்வ அடையாள அட்டை10. சமூக நீதித்துறையின் அங்கீகாரம் பெற்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ்11. மத்திய அரசின் வேலை வாய்ப்பு அடையாள அட்டை12. தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!