கட்சி ஒருங்கிணைப்பாளர்பதவி, துணை முதலமைச்சர் பதவி வழங்கிய எடப்பாடியாருக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ். ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு..
தேனி நாடாளுமன்ற வேட்பாளர் வி.டி. நாராயணசாமியை ஆதரித்து செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள தி.விலக்கு, செம்பட்டி, கட்டதேவன்பட்டி, நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, கருமாத்தூர், முதலைக்குளம், விக்ரமங்கலம், வாலாந்தூர்,சொக்கதேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்குகளை சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தில் கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.பி.பார்த்திபன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, மாணிக்கம், செல்லம்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் ராஜா, மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், நகர செயலாளர் பூமா ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;
அண்ணா திமுகவில் 40 ஆண்டுகாலம் உழைத்து இன்றைக்கு எடப்பாடியார் ஆசியுடன் வேட்பாளராக நாராயணசாமி களம் காண்கிறார். அதிமுகவை எதிர்த்து நிற்பவர்கள் யார்?இரட்டை இலை சின்னத்தால் வளர்ந்து, இன்றைக்கு அதற்கு எதிராக போட்டியிடுகிறார்கள் இதுதான் தர்மமா, நியாயமா? பதவிக்காக எதிர்த்து நிற்கிறார்கள் என உசிலம்பட்டி மக்கள் இன்றைக்கு கேள்வி எழுப்புகிறார்கள்.
பிஜேபி கூட்டணியில் டிடிவி தினகரன் இங்கு போட்டியிட்டு இரட்டை இலையை தோற்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார் தனக்கு வாழ்வு கொடுத்த, அடையாளம் கொடுத்த கட்சியை எதிர்த்து தோல்வி பெறும் என்று கூறுகிறார் நிச்சயம் இரட்டை இலை வெற்றி பெறும்.
இன்றைக்கு அதிமுகவை எதிர்த்து குக்கரை தூக்கிக்கொண்டு செல்கிறார் அங்குள்ள மக்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போட குக்கரை இலவசமாக தருகிறார் என மக்கள் கூறுகிறார்கள்.
இன்றைக்கு திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது, சென்ற இடமெல்லாம் அதிமுக வேட்பாளருக்கு மிக மகத்தான வரவேற்பு அளித்து வருகிறார்கள். திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வேட்பு மனு தாக்கலின் போது நாமினேஷன் பேப்பரை கூட வீட்டில் வைத்து விட்டார் ஏனென்றால், ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர், அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் ஆனார் என்ற ஞாபகத்தில் வீட்டில் வைத்து விட்டார்.
இன்றைக்கு அதிமுகவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து உள்ளது, விரலை நீங்கள் வெட்டினால் கூட நாங்கள் அதிமுகவிற்கு தான்
வாக்களிப்போம் என்று மக்கள் கூறுகிறார்கள்.
ஓபிஎஸ் அம்மா உயிரைக் கொடுத்து உருவாக்கிய அம்மா அரசை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார். இரட்டை இலையை எதிர்த்து ஓட்டு போட்டார், இது சட்டமன்ற வரலாற்று பதிவில் உள்ளது. அம்மா அரசை கலைக்க முயற்சி செய்தார் கடைசியில் தோல்வி தான் பெற்றார்.
அதனை தொடர்ந்து கழகத்தில் ஓபிஎஸ் இணைந்த பொழுது கழகத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், துணை முதலமைச்சர் பதவியும் அதோடு வீட்டு வசதி வாரிய அமைச்சர் பதவியை எடப்பாடியார் வழங்கினார்,மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அம்மா ஆட்சி அமைய வேண்டும் அதற்கு எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என்று முன்மொழிந்தார். ஆனால் துரோகம் செய்துவிட்டார் அதனால் தான் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றி கட்சியில் உள்ள 2 கோடி உறுப்பினர்களும் அவரை நீக்கினார்கள். இன்றைக்கு அவர் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுகிறார் இன்றைக்கு தோல்வி பயம் ஒபிஎஸ்க்கு வந்து விட்டது.எடப்பாடியார் வழங்கிய அரசு பதவி, கட்சி பதவியை கூட உணராமல் துரோகம் செய்துவிட்டு நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.
இது ஜனநாயக நாடு என் பெயர் உதயகுமார் என் பெயரில் உள்ளவர்கள் யாரும் கூட வேட்புமனுதாக்கல் செய்யலாம், அதேபோலத்தான் பன்னீர்செல்வம் பெயரில் உள்ளவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்கள் இதை கூட சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி யார் தகுதியானவர்கள் என்று முடிவு எடுத்து அதனை வெளியிட்டார் .
திமுக பாஜகதான் கள்ள உறவு வைத்துள்ளார்கள் அங்கு உதயநிதி பிரதமரிடம் பல்லைகாட்டுகிறார், இங்கு செங்கலை காட்டுகிறார் மக்கள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பேசினார்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









