ஜெயக்குமார் வழக்கில் கூடுதல் காவல் துறையை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்!- செல்வப் பெருந்தகை பேட்டி..

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சாதி, மதம், மொழி அரசியல் செய்யகூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால், மோடி அரசு கல வர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதனை தடுக்கா மல் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பா.ஜ.க தலைவர்களுக்கு பயம் வருகிறது. அரசியலுக்காக அயோத்தியில் ராமர் கோவிலை மோடி கட்டினார். எங்களுக்கு எல்லா மதமும் சம்மதம். நானும் ராமர் பக்தர் தான். நாங்கள் எப்படி ராமர் கோயிலை இடிக்க விடுவோம். இடிப்பது காங்கிரஸ் வழக்கம் அல்ல, கட்டுவது தான் காங்கிரஸ் வழக்கம்.மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் சத்திய ராஜ் நடித்தால் உண்மையாக நடிக்க வேண்டும்.கல்வி என்றால் பெருந்தலைவர் காமராஜர் தான் முன்னுதாரணம். கல்வி பற்றி பேசுவதற்கு பா.ஜ.க. விற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை.நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அறிவியல் ரீதியாக விசாரணை நடக்கிறது. அவசர கதியில் எதையும் செய்யவேண்டாம், நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு வலியுறுத்தி உள்ளோம். சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கை மாற்றுவதற்கு தேவை இருக்காது என்று நெல்லை மாவட்ட எஸ்.பி என்னிடம் தெரிவித்தார்.ஜெயக்குமார் வழக்கில் கூடுதல் காவல் துறையை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று தான் இலவச பேருந்து திட்டம் குறித்து பிரதமர் மோடி தரம் குறையாக பேசி இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!