இந்து அமைப்புக்கள் தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது – திருமண விழாவில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு ஆவேசம்..

இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட காங்., தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது, @சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது சம்பந்தமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்படவேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க கேரள கம்யூனிஸ்ட் அரசு முன் வந்துள்ளது. சபரிமலை கோயிலுக்குள் சம்பிரதாயம் மீறப்படுகிறதெனில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தேவசம் போர்டு பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும்.

கோயிலுக்குள் செல்லும் பெண்கள், பத்திரிகையாளர்கள் மீது இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் காங்கிரஸ், திமுக., கூட்டணி என்றும் தொடரும். பாஜகவுக்கு மாற்று கட்சி காங்கிரஸ் தான். தலைவர் ராகுல் தான் மோடிக்கு மாற்று. பாஜவுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் 2019 லோக்சபா தேர்தலில் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலில் வெற்றி பெறுவோம். எனறார். முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், திமுக நிர்வாகி பெருநாழி போஸ், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் சாயல்குடி வேலுச்சாமி உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!