தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனலாகி வருகிறது. வெயிலின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் குடிநீர் பிரச்சினையும் ஆங்காங்கே உருவாக தொடங்கிவிட்டது.ஏரி-குளங்கள் உள் ளிட்ட நீர் வழங்கும் ஆதாரங்கள் மிக வேகமாக வறண்டு வருவதால் குடிநீர் பிரச்சினை குறித்தும் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாகவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று மாலை 4 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறக் கூடிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறைகளின் செயலாளர்கள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.இந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இன்று 19 மாவட்ட கலெக்டர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு தங்களது மாவட்ட நிலவரங்களை விளக்கி கூறுகின்றனர்.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை, நாகை, நாமக்கல், மதுரை, கன்னியாகுமரி, பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் இன்றைய ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர்.குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் எத்தனை என்பது பற்றியும் விவரமாக எடுத்து கூறுகின்றனர்.இதுதவிர தட்டுப்பா டின்றி மின் வினியோகம் கிடைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதில் விவாதிக்க உள்ளனர்.இது தவிர பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் கல்லூரி கனவு திட்டம் குறித்தும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் `மக்களுடன் முதல்வர் திட்டம்’ உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் நிலைப்பாடு குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.இந்த கூட்டத்தில் கலெக்டர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான குடிநீர் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை காத்துக் கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட உள்ளது.இன்று நடைபெறும் கூட்டம் தொடர்ச்சியாக நாளையும் நடைபெற உள்ளது. இதில் மீதம் உள்ள புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தென்காசி, திருப்பத்தூர், விழுப்புரம், வேலூர் உள்பட 19 மாவட்டங்களில் கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர்.கூட்டத்தில் கலெக்டர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான குடிநீர் மற்றும் மின்சார பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று மேற்கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









