உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: மீண்டும் கோரிக்கை விடுத்த முதலமைச்சர்..

நீதித்துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரைக்கும், நம்முடைய அரசு பொறுப்பேற்றதில் இருந்து,6 மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள்;5 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள்;13 சார்பு நீதிமன்றங்கள்;2 கூடுதல் சார்பு நீதிமன்றங்கள்;7 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள்;18 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள்;3 மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள்;1 குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்;7 வணிக நீதிமன்றங்கள்;9 சிறப்பு நீதிமன்றங்கள்;2 குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளிட்ட 73 புதிய நீதிமன்றங்கள்; 1689 புதிய பணியிடங்கள் மற்றும் இதர வசதிகளுடன் 151 கோடியே 68 இலட்சத்து 47 ஆயிரத்து 995 ரூபாய் செலவில் அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.புதிதாக நீதிமன்ற கட்டடங்கள் கட்டுதல், நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டடங்கள் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டடங்களை பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்கு அரசு 851 கோடியே 43 இலட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறது.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களுக்கு கணினி தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்க 37 கோடியே 94 இலட்சம் ரூபாய் அரசு வழங்கியிருக்கிறது.மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு, கணினி தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்க 66 கோடியே 66 இலட்சம் ரூபாய் அரசு வழங்கியிருக்கிறது.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளைக்கு பல்வேறு நிலையிலான 20 கூடுதல் பணியிடங்களை உருவாக்கி ஆணைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு, பல்வேறு நிலையிலான 244 கூடுதல் பணியிடங்களை உருவாக்கி ஆணைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது. அந்தக் கல்லூரிக்கு விடுதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்கு 100 கோடியே 45 இலட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டிருக்கிறது.நாமக்கல் அரசு சட்டக் கல்லூரிக்கு, விடுதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்கு 102 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மதுரை அரசு சட்டக் கல்லூரிக்கு, புதிய கட்டடம் கட்டும் பணிகளுக்கு ஏற்கெனவே ஒப்பளிக்கப்பட்ட 40 கோடியே 8 இலட்சம் ரூபாயுடன் கூடுதலாக 4 கோடியே 61 இலட்சம் ரூபாய் வழங்கி கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.6 அரசு சட்டக் கல்லூரிகளுக்கு, 480 மாணவர்களை கூடுதலாக அனுமதித்து, ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 12 நபர்கள் அரசு சட்டக் கல்லூரிகளில் விளையாட்டு மற்றும் உடற்கல்வி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையில் தெரிவு செய்யப்பட்ட 12 உதவிப் பேராசிரியர்கள், அரசு சட்டக் கல்லூரிகளில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள்.அரசு சட்டக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 36 உதவிப் பேராசிரியர்களுக்கும், அதில் 5 உதவிப் பேராசிரியர்களுக்கும் இணைப் பேராசிரியர் நிலைக்கு பணி மேம்பாடு வழங்கப்பட்டிருக்கிறது.அரசு சட்டக்கல்லூரிகளில், காலியாக இருக்கின்ற 2 பழங்குடியினர் பிரிவினருக்கான பின்னடைவு காலி பணியிடங்கள், 8 இணைப் பேராசிரியர்கள், 64 சட்ட உதவிப் பேராசிரியர்கள் மற்றும் 60 சட்ட முன்படிப்பு உதவிப் பேராசிரியர்கள் என்று மொத்தம் 132 காலி பணியிடங்கள நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 24.01.2025 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு நிரப்பப்படவுள்ளது.- இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தித் தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.நீதித் துறை உட்கட்டமைப்புக்குத் தேவையான அனைத்து வசதிகளை மேம்படுத்தித் தர தமிழ்நாடு அரசு என்றைக்கும் துணை நிற்கும். உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள் வருகைபுரிந்துள்ள இந்த நேரத்தில், சென்றமுறை இதே இடத்தில் நான் வைத்த ஒரு முக்கியமான கோரிக்கையை மீண்டும் ஒருமுறை இங்கே நினைவுபடுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன்.உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்தால், தென்மாநில மக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்பதை மீண்டும் இந்த நேரத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன்னோடியான அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி, என்னுடைய உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.“அரசமைப்புச் சட்டம் என்பது வழக்கறிஞர்களின் கையில் இருக்கும் ஒரு ஆவணம்தானே எனக் கருதக்கூடாது; அது நமது வாழ்க்கைப் பயணத்தில், நமது வாழ்வின் தரத்தையே மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனமாகும்; அது எப்போதுமே இந்த மண்ணின் ஆன்மாவாக விளங்குகிறது” என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னார்!அதுபோல வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்; செயல்பட வேண்டும் என்று கேட்டு, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லி எனது உரையை நினைவுச் செய்கிறேன்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!