தமிழகம், புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சோலையார், வால்பாறை, நீலகிரி மாவட்டம் செருமுள்ளி ஆகிய இடங்களில் தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற் றழுத்த தாழ்வு மண்டலம், அதே பகுதியில் நீடிக்கிறது. நாளைக்குள் இது, மத்திய கிழக்கு பகுதியை கடந்து செல்லும் வகையில் நகரக்கூடும்.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில், நவ., 5 வரை லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


You must be logged in to post a comment.