அரியலூர் மாவட்டம் கீழ குளத்தூரை சேர்ந்த கென்னடி (வயது 45) என்பவர் தமாமில் உள்ள மில்டரி கெஸ்டவுஸில் மெயின்டனஸ் மேனேஜராக பணி புரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 22/11/2018 அன்று சவுதி அரேபியா தமாமில் மாரடைப்பால் காலமானார்.
இறந்த கென்னடிக்கு மங்களதேவி (வயது 33) என்பரும், டயானா(வயது 13) என்ற மகளும், கிளின்டன் (வயது 11) என்கிற மகனும் உள்ளார்கள். இறந்த கென்னடி அவர்களின் உடல் குடும்பத்தார்கள் கேட்டுக் கொண்டதற்காக தமுமுக சவுதி தமாம் மண்டலம் சார்பாக உடலை பெற்று திருச்சிக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி தமுமுக சார்பில் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில் மமக மாவட்ட செயலாளர் அப்துர் ரஹீம் (எ) பாபு, ஃபீனிக்ஸ்.ராஜா, நசீர், ஏர்போர்ட் கிளை நிர்வாகிகள் ஜான்பாஷா, ரமத்துல்லா, கலிபுல்லா ஆகியோர்கள் 14.12.2018 காலை 9 மணிக்கு திருச்சி ஏர்போர்டில் இருந்து உடலை பெற்று உறவினர்களிடம் ஒப்படைத்தார்கள்.
தகவல்:- கீழை இர்ஃபான், ஜித்தா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










