ஜித்தாவிலிருந்து கோவை புறப்பட்ட வந்தே பாரத் விமானம்.. 173 தமிழர்களை வழியனுப்பிய ஜித்தா தமுமுக தன்னார்வளர்கள்..

கடந்த (ஜூன் 28) வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இரண்டாவது விமானம் ஜித்தாவிலிருந்து கோவைக்கு மாலை 5 மணியளவில் 26 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 173 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

ஜித்தா தமுமுக நிர்வாகிகள் மற்றும் ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சகோ. சிராஜ் ஆகியோர்கள் பயணிகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தனர்.

மேலும் கோவை இறங்கியவுடன் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கோவை மாவட்ட தமுமுக -மமக நிர்வாகிகள் ரஃபீக், ஜெம் பாபு, முஜீப் தலைமையில் தன்னார்வ குழுவினர் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்து உதவியது குறிப்பிடதக்கதை.

மேலும் தமுமுக மாநில பொருளாளர் ஷபியுல்லாகான் தலைமையில் மமக பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப், மமக பொதுச்செயலாளர் மதுரை கவுஸ், தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், தமுமுக மாநில செயலாளர் கோவை சாதிக் அலி ஆகியோர் வளைகுடா நாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு உதவ தமுமுக தொண்டர்கள் அனைத்து விமான நிலையங்களிலும் களப்பணியில் உள்ளதும் குறிப்பிடதக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!