ஆணையங்களின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி ‘தமுமுக’ சார்பில் கோரிக்கை கருத்தரங்கம் – சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகியவற்றை மேம்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையிலும், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உரிய ஒதுக்கீட்டை அளிக்கும் பொருட்டு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலும் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த இரண்டு ஆணையங்களின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கோரிக்கை கருத்தரங்கம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கடந்த 21.03.17 அன்று நடைபெற்றது. கருத்தரங்கையொட்டி சமூக நீதியை நிலை நாட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 1995 முதல் நடத்திய போராட்டங்கள் குறித்த புகைப்பட கண் காட்சியும் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரும், மனித நேய மக்கள்கட்சி தலைவருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினர். துணைத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் பி.அப்துல்சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ்.ஹமீது, பொருளாளர் பி.எம்.ஆர்.சம்சுதீன், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி (தி.மு.க.), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வாசுகி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு) ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!