இராமநாதபுரம் : பள்ளிவாசல் சொத்துகளை கபளிகரம் செய்ய கொண்டு வரப்பட்டுள்ள வக்ப் திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற கோரியும், வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 முழுமையாக கடைப்பிடிக்க கோரி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் தமுமுக சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமுமுக துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். மே 17 இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி கண்டன உரை ஆற்றினார். தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, இஸ்லாமிய பிரசார பேரவை செயலாளர் அப்துல்காதர் மன்பயி, உசேன் கனி, சம்சுதீன்சேட். தமுமுக மகளிர் பேரவை பொருளாளர் ஷான் ராணிஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ராமநாதபுரம் தெற்கு, மேற்கு, மத்தி, கிழக்கு, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட தலைவர்கள் வாவா ராவுத்தர், ஷேக் அப்துல்லா இப்ராஹிம், பட்டாணி மீரான், ஷேக் தாவுதீன், துல்கருணை சேட் உள்பட பலர் பங்கேற்றனர்.

You must be logged in to post a comment.