இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தமுமுக.. மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்..

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களின் உத்தரவின் அடிப்படையில் கொரோனா தொற்றல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை சாதகமாக பயன்படுத்தி ஏழை எளிய நாட்டு மக்களுக்கும்  விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவர முயல்கிறது.
மின்சார திருத்த சட்டம் , அத்தியாவசிய  பொருட்கள் திருத்த சட்டம்,  வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய மக்கள் விரோத, சட்டைகளை மத்திய அரசு இயற்ற நடவடிக்கை எடுத்து வருவதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டித்து
இந்த சட்டங்களை எதிர்த்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு ஜூலை 27 இன்று  நடத்த உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போரட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி  ஆதரவு அளித்து மனிதநேய மக்கள் கட்சியினரின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இந்த மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பை வெளிபடுத்தி தமுமுக மாநில செயலாளர்  சலிமுல்லாஹ்கான் தலைமையில், சரிபு மேலபுதுக்குடி,மாநில மீனவ அணி பொருளாளர்,  M.பட்டானி மீரான் (ஆனந்தூர்) தமுமுக-மமக மாவட்ட தலைவர்,  N.ஜிஃப்ரி (வழக்கறிஞர்-தொண்டி),  தமுமுக மாவட்ட செயலாளர்,  S.முஜிபுர் ரஹ்மான் (கீழக்கரை) மமக மாவட்ட செயலாளர்,M.பரக்கத்துல்லாஹ் (பனைக்குளம்), மாவட்ட பொருளாளர், தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் A.அப்துல்(ஷாகுல்) ஹமீது மேலபுதுக்குடி Mரைஸ் இபுராஹிம் தங்கச்சிமடம் ஆசிக்’, தேவிபட்டினம் சுல்தான்
மாவட்ட  அணி நிர்வாகிகள்மாணவர் அணி இர்பான் தொண்டர் அணி பகுருல் ஹசன் இளைஞர் அணி சபிக் மருத்துவ அணி யாசர் வர்தக அணி அஹமது ஹசன் விளையாட்டு அணி ஆனந்தூர் உமர் ஆகியோர் முன்னிலையில்  இணையவழி போராட்டம் நடைபெற்றது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!