திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து வரும் நபர்களின் உடல்களை ஜாதி மதம் பார்க்காமல் அவரவர் மதத்தை சார்ந்து அடக்கம் செய்து வருகின்றனர்.
கிட்டதட்ட இதுவரை சுமார் 79 பேரின் உடல்களை தமுமுகவின் நிர்வாகிகள் அடக்கம் செய்துள்ளனர் இந்நிலையில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்து தருமாறு அவரது உறவினர்கள் திண்டுக்கல் நகர தமுமுக அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டனர் உடனடியாக தமுமுக வினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று முறைப்படி இறந்தவரின் உடலை பெற்று அவர் சார்ந்த கிருஸ்துவ மதத்தின் முறைப்படி நல்லடக்கம் செய்தனர். வக்கம்பட்டி கல்லரை தோட்டத்தில் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்த திண்டுக்கல் தமுமுக நிர்வாகிகளுக்கு இறந்தவரின் உறவினர்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து இது போன்ற சேவைகளை புரிந்து வரும் தமுமுகவின் செயல்பாடுகள் பெரும் அளவில் உதவியாக இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









