கீழக்கரையில் தமுமுக – மமக சார்பில் தையல் மிஷின் வழங்கல்

கீழக்கரை நகர் தமுமுக – மமக சார்பில், வாத நோய் பாதிப்பால் உழைப்பை இழந்த டீக்கடை தொழிலாளியின் குடும்ப பாதுகாப்பிற்காக, அவரது மனைவி தையல் தொழில் செய்து பொருளாதாரம் ஏற்படுத்த ஏதுவாக நேற்று முன் தினம் 22.03.17 தையல் மிஷின் வழங்கப்பட்டது. அதனோடு சேர்த்து தையல் தொழிலுக்கு ஏற்ற அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.ஈ.உமர்அப்துல்காதர் கலந்து கொண்டு தையல் மிஷின் வழங்கினார். உடன் தமுமுக மமக நகர் நிர்வாகிகள், தமுமுக நகர் செயலாளர் முகம்மது சிராஜுதீன், இன்ஜினியர் நசீர், சாகுல்அமீது மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் (தமுமுக), 3 வது வார்டு செயலாளர் மெக்கானிக் தாஹா கலந்து கொண்டனர்.

தகவல் : இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் ஊடக பிரிவு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!