மத்திய அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் ஊழல்…தமுமுக, மமக தங்கச்சி மடம் பொதுக்கூட்டம்..

இராமநாதபுரம்,ஆக.7-  இராமநாதபுரம் மத்திய மாவட்ட தமுமுக, மமக சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் ஊழல், முறைகேடுகளை கண்டித்து தங்கச்சிமடத்தில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லா கான் தலைமை வகித்தார். 

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் கைது,
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாதிப்பு, மணிப்பூர் கலவரம் குறித்து தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், ஊடகவியலாளர் தி.செந்தில்வேல், திராவிடர் கழகதுணை பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் பேசினர். தமுமுக, மமக மாவட்ட தலைவர் எஸ். இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் கே.அப்துல் ரஹீம், மமக மாவட்ட செயலாளர் எம்.ஆசிக் சுல்தான், மமக மாவட்ட பொருளாளர் எஸ்.ஹமீது சபீக் உள்பட பலர் பங்கேற்றனர். தமுமுக சேவையில் மாணவர் 50 பேர் இணைந்தனர். மண்டபம் ஒன்றியம் (ம) தங்கச்சிமடம் கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

செய்தியாளர்:- முருகன்

 

 

 

 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!