நெல்லையில் பிரசவ அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் தமுமுகவினருடன் காவலர்களும் இரத்ததானம் செய்தனர். இரத்தம் அளித்த குருதி கொடையாளர்களை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர். தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையை சேர்ந்தவர் மாதேஷ்வரி. இவர் பிரசவத்திற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் உடனடியாக பிரசவ அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் மூன்று யூனிட் இரத்தம் அவசரமாக தேவைப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் நெல்லை மாவட்ட தமுமுகவினரை தொடர்பு கொண்டுள்ளனர்.
இதையடுத்து (18.08.2023) காலையில் தமுமுக மருத்துவ சேவை அணி செயலாளர் குதா முஹம்மது தலைமையில் தமுமுகவினர் இரத்தம் கொடுக்க மருத்துவமனை சென்றனர். அப்போது அங்கு வந்த நெல்லை மாவட்ட காவல் துறையை சேர்ந்த காவலர்கள் மாதேஷ்வரன் மற்றும் சூர்யா ஆகியோர் தாமாகவே முன்வந்து கர்ப்பிணி பெண்ணின் பிரசவ அறுவை சிகிச்சைக்காக இரத்ததானம் செய்தனர். குறுதிக் கொடையாளிகள் அனைவரையும் அரசு மருத்துவ மனை இரத்தப்பிரிவு மருத்துவர்களும், அதிகாரிகளும் பாராட்டினர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்





You must be logged in to post a comment.