துபையில் 71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 18ம் தேதி தமுமுக சார்பாக 19வது ரத்த தான முகாம் நடைபெற்றது..

தமுமுக துபை மண்டலம் சார்பாக துபை லத்திஃபா மருத்துவமனையில் இன்று (18-08-2017) மாபெரும் இரத்ததானம் முகாம் மண்டல தமுமுக தலைவர் அதிரை சாகுல் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் துபையில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்

இம்முகாமில் அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி, அமீரக தமுமுக துணை தலைவர் AS இப்ராஹிம் மற்றும் அமீரக துணை செயலாளர் கஸ்சாலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர துபை மண்டல தமுமுகவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில் காலை  8 மணிக்கு தொடங்கியது. மேலும் மாற்றுமத சகோதரர்களும் அதிக அளவில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

சோனாப்பூர், தமிழ் பஜார், பார் துபாய், ஹோர் லஸ், பராக மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சகோதரர்கள் கலந்துகொள்வதற்கான வாகன வசதிகளை சமுக ஆர்வாளரும் தொழிலதிபருமான இளையான்குடி அபுதாஹீர்  செய்திருந்தார்.

சிறப்பாக நடைபெற்ற முகாமிற்கான ஆயத்தப்பணிகளை மமக மண்டல செயலாளர் கீழை ஜெய்னூல்.ஆபிதீன், மண்டல தமுமுக செயலாளர் அடியற்கை ஷேக் தாவூத், மண்டல துணை செயலாளர்கள் மண்ணை அமீன், நிஜம், முகவை அப்துல் ரஹ்மான், மருத்துவ அணி செயலாளர் அதிரை ஷேக், மக்கள் தொடர்பாளர் திருச்சி பிலால் ஊடகதுறை செயலாளர் முத்துபேட்டை பைசல் ஷார்ஜா மண்டல தலைவர் சலீம் ரபாணி மற்றும் துபாய் மண்டல் கிளை நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!