புதுமடத்தில் விபத்துக்குள்ளான மின்சார ஊழியருக்கு தமுமுக சார்பாக நிதி உதவி..

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம்  மின்சார ஊழியர் திரு பால்சாமி அவர்கள் மின்பகிர்மானம் பழுது பார்க்கும் பொழுது புதுமடத்தில் விபத்துக்குள்ளானார் அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரான நோய் பரவும் இந்த இருக்கமான காவ காலகட்டத்தில் மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணி செய்யும் மருத்துவர் & செவிலியர் காவல்துறை துப்புரவு பணியாளர்கள் மின் பொறியாளர் & ஊழியர்களின் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது.  இதை கருத்தில் கொண்டு மின்சார ஊழியர் பால்சாமி  விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுவோம் அவரின் ஏழ்மை நிலையை அறிந்து அவருக்காக புதுமடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மருத்துவ உதவியாக ரூபாய் 20 ஆயிரம்  வழங்கப்பட்டது.
இதற்காக ஏற்பாடு செய்த புதுமடம் நிர்வாகத்திற்கும் மருத்துவ உதவியைப் பெற்றுக் கொண்ட பால்சாமி குடும்பத்தினர் நன்றியை தெரிவித்தார்கள்  இந்த உதவியை தமுமுக மாநிலச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் மாவட்ட பொருளாளர் பரக்கத்துள்ளாஹ் மாநில செயற்குழு உறுப்பினர் புதுமடம் இப்ராஹிம், சுலைமான், ஜஹிர்பாபு. ஹாஜா சுகுபுதீன் ஆகியோர் பால்சாமி  மகன் முகேஷிடம் ஒப்படைக்கப்பட்டது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!