திருப்புல்லாணியில் மன்னர் குமரன் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் மன்னர் குமரன் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்புல்லாணியில் நம்ம ஊர் திருப்புல்லாணி குழு மற்றும் ஐ சி ஐ சி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து பாலசுப்பிரமணிய சாமி கோயில் பகுதியில் ரத்தினகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராஜபாரதசாரதி ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 600 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி சிறப்பு அழைப்பதறாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மேலும் நிழல் தரும்மரங்கள் இப்பகுதியில் மிகவும் குறைவாக இருப்பதாலும் கடற்கரைப்பகுதியான இங்கு அதிகமான உவர்ப்பு தன்மை இருப்பதால் தினந்தோறும் குடிநீர் வாகனங்களின் தண்ணீர் எடுத்து வந்து மரங்களை வளர்க்க இக்குழு முயன்று வருகின்றனர். இதில் மாமரங்கள், வாழை புங்கன், அத்தி, மாதுளை, கொய்யா, சப்போட்டா, போன்ற பழக்கன்றுகளும் தென்னை, நீர்மருது சீத்தாப்பழம், போன்ற மரங்களை நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!