“திமோர் நாட்டில் உள்ள பீஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் குறைந்த கட்டணத்தில் எம்.பி.பி.எஸ். படிக்கலாம்” என பல்கலைக் கழக அட்மிஷன் இயக்குனர் டாக்டர் ஏகலைவன் தெரிவித்து உள்ளார். இது குறித்து திமோர் பீஸ் மருத்துவ பல்கலைக்கழக அட்மிஷன் டைரக்டர் டாக்டர். ஏகலைவன் கூறியதாவது, வெளிநாட்டு மருத்துவக் கல்வியில் திமோர் நாட்டின் பீஸ் மருத்துவ பல்கலைக் கழகம் முன்னணி வகிக்கிறது. இங்கு எம்.பி. பி.எஸ் படிப்பதற்கான கால அளவு 4.5 ஆண்டுகளாகும். இங்கு ஆங்கிலத்தில் படித்து தேர்வு மற்றும் பிற மொழிகள் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
இந்தியாவில் உள்ள டாக்டர் படிப்பு போலவே திமோர் பீஸ் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் படிப்பும் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். எய்ம்ஸ் பாடத் திட்டம் கூடுதல் சிறப்பாகும். மொத்த கல்வி கட்டணம் ரூ. 14.5 லட்சமாகும். “உன்பாஸ்” என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மருத்துவ பல்கலைக் கழகத்தில் இயக்குனர்கள், டீன், பேராசிரியர்கள், சமையல் கலைஞர்கள், வார்டன் என பல முக்கிய பொறுப்புகளில் தமிழர்கள் உள்ளனர். 100 சதவீதம் தேசிய மெடிக்கல் கமிஷன் சட்ட திட்டங்களை ஒத்துப் போவதால் நாடு திரும்பியதும் மாணவர்கள் மருத்துவ சேவை ஆற்றலாம்.
இன்டர்ன்ஷிப் இந்தியாவில் உள்ளதைப் போலவே ஓராண்டு கொண்டதாகும். படித்து முடித்தவுடன் மருத்துவப் படிப்பை பதிவு செய்வதற்கு சில நாடுகளைப் போல தேர்வு கிடையாது. திமோர் ஆசிய கண்டத்தில் இருப்பதால் நமது ஊர் தட்ப வெட்ப நிலை தான் அங்கு காணப்படுகிறது. வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. ஆண்டு கட்டணம் ரூ.2.5 லட்சமாகும். உணவு, தங்குமிடம், விடுதி உள்ளிட்ட கட்டணங்களை நிர்வாகத்திடம் கேட்டு அறிந்து கொள்ளலாம். எப்.எம்.ஜி.இ மற்றும் யு.எஸ்.எம்.எல்.இ தேர்வுகளுக்கு திமோரிலேயே தனிப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஸ்கிரீன் தேர்வு இல்லாமலேயே திமோர் நாட்டில் டாக்டராக பணியாற்ற லைசென்ஸ் வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு திமோர் நாட்டின் நிரந்தரக் குடியுரிமை பெற்றுத் தரப்படும். “பள்ளிக்கு 10 மருத்துவர்கள், கிராமத்திற்கு ஒரு மருத்துவமனை” என்பதே தற்போதைய திமோர் பிரசாரமாகும். திமோர் அண்டை நாடு என்பதால் விமான பயண நேரம் குறைவாகும். தரமான உணவு, குறைந்த கல்வி கட்டணம், இந்திய பாடத் திட்டம், இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது. மேலும் விவரங்கள் அறிந்திட 80123 65655 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு டாக்டர் ஏகலைவன் தெரிவித்தார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.