திமோர் நாட்டில் மருத்துவம் படிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கல்விப் பயணம் மேற்கொண்டனர். அப்போது சிறப்பாக மருத்துவ கல்வி பயின்று முழுமையான மருத்துவராக தாயகம் திரும்பி மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டுமென பீஸ் மருத்துவப் பல்கலைக்கழக இயக்குனர் ஐசக் பாஸ்கர், சமூக நல ஆர்வலர் திருமாறன், தினமலர் தினேஷ் ஆகியோர் மாணவ மாணவியரிடம் அறிவுறுத்தினர். நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் உருவாகும் உன்னத நோக்கத்துடன் தமிழக மாணவ மாணவியர் வெளி நாடுகளுக்குச் சென்று மருத்துவப் பட்டம் பெற்று தாயகம் திரும்புகின்றனர். முதல் முறையாக திமோர் நாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ மாணவியர்கள் மருத்துவம் படிக்க திமோரிலுள்ள பீஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கு செல்கின்றனர்.
இந்நிலையில், மருத்துவம் படிக்க செல்லும் மாணவ மாணவியர்களை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடந்தது. இந்நிகழ்விற்கு பீஸ் மருத்துவப் பல்கலைக்கழக இயக்குனர் ஐசக் பாஸ்கர் தலைமை தாங்கினார். திருநெல்வேலி தினமலர் நிர்வாக இயக்குனர் தினேஷ், பேராசிரியை கிரிஜா சிவகுமார், மாணவர்களுக்கு மலர் மாலைகள் அணிவித்து வழியனுப்பி வைத்தனர். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் மருத்துவப் படிப்பிற்கு திமோர் செல்லும் மாணாக்கர்களை “நாடு போற்றும் வகையில் மருத்துவர்களாகி நாடு திரும்புவோம் என்ற உறுதிமொழியினை ஏற்க செய்தார். உறுதி மொழியினை மாணாக்கர்கள் அனைவரும் ஏற்றனர். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு முதன் முறையாக திமோர் சென்று திரும்பியதன் பிரதிபலிப்பு இது என ஐசலின் பாஸ்கர் தெரிவித்தார். ஏராளமான பெற்றோர்கள் விமான நிலையம் வந்திருந்தனர். பண்பாடு, பழக்க வழக்கம், பாரம்பரியம் குறையாமல் முழு மருத்துவராக தாயகம் திரும்ப வேண்டுமென தினேஷ், ஐசக் பாஸ்கர் மற்றும் திருமாறன் ஆகியோர் மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தினர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.