கீழக்கரையில் முறைப்படுத்தப்படாத, முறையான வழிகாட்டலும் இல்லாத வாகன வசூல் தினமும் நடந்த வண்ணமே உள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பல முறை சமூக ஆர்வலர்களால் புகார் அளிக்கப்பட்டாலும், நிரந்தர தீர்வு காணாமல் சில காலங்களில் மீண்டும் தொடங்கி விடுகிறது.
இது சம்பந்தமாக முன்னாள் கீழக்கரை நகராட்சி ஆணையர் வசந்தியிடம் கோரிக்கை வைத்த பொழுது, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2018 மார்ச் வரை குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது, குத்தகை காலம் முடிந்த பின்பு முழுமையாக சீர்படுத்தப்படும் என உத்திரவாதம் அளித்திருந்தார். ஆனால் இப்பொழுது அவரும் இடம் மாற்றிவிட்டார், வாக்குறுதியும் காற்றோடு பறந்து விட்டது.
கோடை கால விடுமுறையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கீழக்கரை வழியாக வரும் சுற்றுலா பயணிகளிடம், முறையில்லாமல் கட்டணம் வசூலிப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக கீழக்கரை SDPI கட்சி நிர்வாகி கூறுகையில், “கீழக்கரை நகர் SDPI. கட்சி சார்பாக பல தடவை மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் முறையிட்டு உள்ளோம். நகராட்சி நிர்வாகம் சம்பந்தபட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் கீழகரை நகர் SDPI கட்சி சார்பாக கண்டன போஸ்டர்கள் மற்றும் மக்களை திரட்டி நகராட்சி நிர்வாகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என கூறி முடித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









