மதுரை எல்லீஸ் நகர் சேர்ந்த ராமச்சந்திரன் வயது 24 இவர் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் டிக் டாக் செயலி மூலமாக ஏமாற்றி பணம் பறித்ததாக புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விசாரித்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் திருப்பூரை சேர்ந்த இளம் பெண் டிக்டாக் மூலமாக பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் அந்த இளம்பெண்ணை பிடிப்பதற்கு மதுரை மாநகர் , காவல்துறை கூடுதல் இயக்குநர் மற்றும் காவல் ஆணையாளர் . டேவிட்சன் ஆசீர்வாதம் , உத்தரவின் படி , காவல் துணை ஆணையர் குற்றப்பிரிவு பழனிக்குமார் , மேற்பார்வையில் , ஜெயக்குமார் . காவல் உதவி ஆணையர் திலகர்திடல் குற்ற சரகம் மற்றும் சி 3 – எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு ஆலோசனையின் பேரில் சார்பு ஆய்வாளர் மணிக்குமார் தலைமையில் தனிப்படையினர் 07.06.2020 ம் தேதி மதியம் 14.00 மணிக்கு திருப்பூர் , ஆலங்காடு , வீரபாண்டி பிரிவு அருகில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த சுசி என்கின்ற பெண்மணியை கைது செய்து விசாரணை செய்ததில்,
முகநூலில் தொடர்பு கொண்டு பல இளைஞர்களிடம் பலவித காரணங்களை சொல்லி ஆசை வார்த்தை மூலம் நம்பவைத்து ஏமாற்றி பணத்தை பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ள விபரம் தெரியவந்ததின் பேரில்,
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை செய்ததில் குற்றங்கள் செய்ததை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இக்குற்றங்களுக்கு ஆதாரமாக அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து 08.06.2020 தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக வலைதளங்கள் மூலமாக எவ்வளவு தான் ஏமாற்றப் பட்டாலும் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவது வேதனையைத் தருகிறது.
செய்தியாளர், காளமேகம். மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.