தூத்துக்குடி தூயபனிமய மாதா பேராலயத்திருவிழா ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது

தூத்துக்குடி தூயபனிமய மாதா பேராலயத்திருவிழா ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது, தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் கொடியேற்று விழாவை தொடங்கி வைக்கிறார்”: பங்குத்தந்தை குமார் ராஜா பேட்டி:தூய பனிமய அன்னையின் 427 ஆம் ஆண்டு பெருவிழா வானது ஜூலை 26-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்டு 5 திங்கட் கிழமை வரை நடைபெற உள்ளது.ஜூலை 26 ஆம் தேதி தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன் கொடியேற்று விழாவை தொடங்கி வைக்கிறார்

இவரோடு இணைந்து பெருவிழா நாட்களை திருச்சி முன்னாள் ஆயர் அந்தோணி டிவோட்டா கோட்டாறு ஆயர் நசரேன் தூத்துக்குடி முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் ஆகியோர் கலந்து உண்டு சிறப்பிக்கிறார்கள்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆகஸ்டு 5 ஆம் தேதி அன்னையில் திருவுருவப்பவனி நடைபெற உள்ளது.இந்த ஆண்டு தூயபனிமய மாதா பேராலயத்திருவிழா  பிளாஸ்டிக் இல்லாத,  பாதுகாப்பான திருவிழாவாக இருக்கும்.திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை, குமார்ராஜா,துணை பங்குத்தந்தை கிங்ஸ்டன், ஜேசுராஜா, சகோ மைக்கேல் மற்றும் பங்கு மேய்ப்புப் பணிப் பேரவையினர் செய்து வருகின்றனர். இந்த திருவிழாவை காண வரும் பக்தர்களை அன்புடன் அழைக்கப்படுகின்றனர் “எனக் கூறினார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!