நெல்லையில் லாரி டிரைவரிடம் லஞ்சம்-ஆயுதப்படை காவலர் அதிரடி சஸ்பெண்ட்…

நெல்லையில் லாரி டிரைவரிடம் லஞ்சம்-ஆயுதப்படை காவலர் அதிரடி சஸ்பெண்ட்…

நெல்லையில் உணவுப்பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை-தென்காசி சாலையில் ராணி அண்ணா மகளிர் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 24-ம் தேதி பணியில் இருந்த ஆயுதப்படை காவலரான செல்வகுமார் என்பவர் அந்த வழியாகச் செல்லும் வாகனங்களை வழிமறித்து வசூல் செய்ததாகப் புகார் எழுந்தது.

அந்த வழியில் உணவுப் பொருளை ஏற்றிச் சென்ற லாரியை மறித்த காவலர் செல்வகுமார் 50 ரூபாய் லஞ்சம் பெறும் காட்சி வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதால்,இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் காவலர் செல்வகுமார் லாரி டிரைவரை மிரட்டி லஞ்சம் பெற்றது தெரியவந்தது. அதனால் அவரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர் தீபக் டாமோர் அதிரடியாக உத்தரவிட்டார்.

கொரோனா நிவாரணப் பணிக்கு உணவுப் பொருள் ஏற்றிச் சென்ற லாரி டிரைவரிடம் லஞ்சம் பெற்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாநகரக் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!