ஸ்ரீரங்கத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு.!
திருச்சி திருவானைக்கோவில் நரியன் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகன் விக்கி என்கிற விக்னேஸ்வரன் (வயது 22) டிரைவரான விக்னேஸ்வரனுக்கு அவரது நண்பர்களுக்கும் நேற்று மாலை மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருகிலிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
அப்போது விக்னேஸ்வரன் எதிரணியை சேர்ந்த ஒருவர் விக்னேஸ்வரனின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துச் சென்றுவிட்டார்.
பின்னர் இரவு 11.30 மணியளவில் விக்னேஸ்வரனுக்கு போன் செய்த அந்த நபர் சாவி தன்னிடம் உள்ளதாகவும் ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் வந்து சாவியை பெற்று செல்லுமாறு கூறியதை அடுத்து அங்கு சென்ற விக்னேஸ்வரனை 10க்கும் மேற்பட்ட நபர்கள் சூழ்ந்துகொண்டு கத்தி மற்றும் அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனால் பதறிப்போன விக்னேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆயினும் அவர்கள் விக்னேஷ்வரனை விடாது துரத்திச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 10 க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


You must be logged in to post a comment.