அரசின் ஆணையை மீறி சுய உதவிக்குழு பெண்களை மிரட்டும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் வாசலிருப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருச்செந்தூர் தாலுகா இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை கட்சியின் நகர பொருளாளர் வாசு உள்ளிட்ட பகுதி கட்சியின் நிர்வாகிகள் ஒருங்கிணைத்திருந்தனர்.
சுயஉதவிக்குழு பெண்கள், பகுதி இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டு கோரிக்கை முழக்கங்கங்களை எழுப்பினர்.
இளஞ்சிறுத்தைகளின் மாவட்ட துணை அமைப்பாளர் இராவணன், சாத்தான்குளம் ஒன்றிய துணைச்செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர் ஆகியோரோடு நானும் கலந்துகொண்டு கோரிக்கைக்கு வலுசேர்த்தனர்.
இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய விடுதலைச் செழியன் கூறியதாவது,
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் பரவலாக இப்போராட்டம் நடைபெற உள்ளது.
மற்ற மாவட்ட தோழர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கலாம்.
மத்திய, மாநில அரசுகளே! கடன் தவணை தள்ளிவைப்பு காலத்திற்கான வட்டியை ஏற்றுக்கொள். சுய உதவிக்குழு, வங்கிகளில் கடன்பெற்ற ஏழை, எளிய மக்களைக் காப்பாற்று என்ற முழக்கத்துடன் என்று கூறினார்.


You must be logged in to post a comment.