தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்பு மனு தாக்கல்..

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி வேட்புமனு தாக்கல்..

INDIA கூட்டணியின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் APCV.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!