ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அழகப்ப பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறை இணைந்து நடத்தும் தென்மண்டல அளவிலான பயிலரங்கம் சமகால சுற்றுச்சூழல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் நடைபெற்றது.
பயிலரங்கத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஜெ.ஜே. லியோன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலர் புல்லூர் ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் போது ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் காந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். கடலியல் மற்றும் கடலோரவியல் துறை மூத்த பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ரவிக்குமார் குத்து விளக்கு ஏற்றி பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் இணை பேராசிரியர் கருணாகரன், தமிழ்நாடு அறிவியல் மேனாள் மாநில பொருளாளர் ஜீவானந்தம், மாநிலச் செயலாளர் பரமசிவம் மாநில துணைத் தலைவர்கள் முத்து லெட்சுமி, பாண்டியம்மாள், அறிவியல் எழுத்தாளர் மோகனா , தமிழ்நாடு அறிவியல் இயக்க மேனாள் தலைவர் தினகரன், மாநில செயலாளர்கள் பாலகிருஷ்ணன், நாராயணசாமி, ஜெனிட்டா, ராதா ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் புல்லூர் ஜீவானந்தம் நன்றி கூறினர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் சசிகுமார், ஜெரோம், வின்சென்ட் வீறு, கணேசன், பிரியங்கா வைஷ்ணவி, கல்பனா, பாடகர் கருணாநிதி, துளிர் இல்லம் ஜெகதீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.