தொண்டி அருகே வீட்டில் கடல் பல்லி பதுக்கியவர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடியைச் சேர்ந்தவர் காளிமுத்து . இவரது மகன் நாகநாதன், 34. இவர்வீட்டில் கடல் பல்லிகளை பதப்படுத்தி பதுக்கி வைத்துள்ளதாக தொண்டி கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கம், தேவிபட்டினம் கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் அய்யனார், தனிப்பிரிவு காவலர் இளையராஜா ஆகியோர் நாகநாதன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு 10 கிலோ கடல் பல்லிகளை பதப்படுத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடல் பல்லிகளை பறிமுதல் செய்த போலீசார், நாகநாதனை கைது செய்தனர்.

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!