ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தொண்டி, பொதுமக்களின் நலனை கருதி பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழக மாநில ஒருங்கினைப்பாளர் முஹம்மது பஹ்ருல்லா ஷா கோரிக்கை மனு அளித்துள்ளார் .இது குறித்து அவர் கொடுக்கபட்ட மனுவில் கூறியிருப்பதாவது
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அரசு மருத்துவமனை முதல் புதிய பேருந்து நிலையம் வரை சாலை சேதமடைந்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சிறு குட்டைகள் போல் உள்ளது. எனவே இதனை தற்காலிக சீரமைப்பினை செய்யாமல் நிரந்திரமாக சீரமைக்க வேண்டும். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் மாடுகள் சுற்றிதிரிவதால் வாகன ஒட்டிகள் சிரமத்தினையும் விபத்தில் சிக்கியும் வருகின்றனர். எனவே கால் நடை உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்தும் அபதாரமும் விதிக்க வேண்டும் . மேலும் தொண்டி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளை மணல் தெரு வழியாக தெற்கு தோப்பு செல்லும் சாலை பேரூராட்சி நிர்வாகத்தால் புதிதாக போடபட்டது . இந்த பகுதியில் சிறுவர்களுக்கான அரசு ஆரம்ப பள்ளி.அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முனவ்வரா நடு நிலை பள்ளி மற்றும் இஸ்லாமிக் மெட்ரி பள்ளி மொத்தம் நான்கு பள்ளிகள் உள்ளன. இப்பாதையில் கனரக வாகனம் எல்லா நேரங்களில் அதிக அளவில் செல்வதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளி நேரங்களில் இவ்வழியாக கனரக வாகனம் செல்வதை தடை செய்ய பேரூராட்சி நீர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு இவ்மனுவில் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் நகர, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
ஜெ.அஸ்கர்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









