தொல்.திருமாவளவன் மீது, டிஜிபி சங்கர் ஜிவால் இடத்தில் இந்து மக்கள் கட்சி பரபரப்பு புகார்..

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவுறுத்தலின் பேரில் அக்கட்சியின் அமைப்பு குழு பொதுச் செயலாளர் ஆனந்த் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான அருண் நேருவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட போது, உண்மைக்கு புறம்பான சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான விஷயங்களை தன்னுடைய பிரசார உரையில் குறிப்பிட்டுள்ளார்.மோடி மீண்டும் பிரதமர் ஆனால் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தேவாலயங்கள், மசூதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று பேசியுள்ளார்.மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி வீசிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார். அவரது உரையில் மத வெறுப்பு பிரசாரமும் பிரதமர் மோடியின் மீதான அவதூறு பிரசாரமும் மிகவும் மேலோங்கி காணப்படுகிறது.பா.ஜ.க. தான் பாபர் மசூதி கட்டிடத்தை இடித்தார்கள் என்று எங்கேயும் சட்ட பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. பா.ஜ.க.வின் மேடைகளிலோ அல்லது சங்பரிவாரின் மேடைகளிலோ தொல்.திருமாவளவன் கூறுவது போல் எங்கேயும் உரையாற்றியதற்கான சான்றுகள் இல்லை.இது ஐ.பி.சி. சட்டப்பிரிவு 123(3A)யின் படி குற்றமாகும். இந்திய குடிமக்களிடம் மதரீதியான வித்தியாசங்களை பயன்படுத்தி மோதவிட்டு வெறுப்புணர்வோடு வாக்கு சேகரிக்கும் ஒரு யுக்தி ஆகும்.எனவே இருவரையும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!