செங்கம் அருகே மேய்ச்சலில் இருந்த 10 ஆடுகள் மா்மான முறையில் உயிரிழந்தன..

செங்கம் அருகே மேய்ச்சலில் இருந்த 10 ஆடுகள் மா்மான முறையில் உயிரிழந்தன.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பிஞ்சுர் கிராமப்பகுதியில் மேய்ச்சலில் இருந்த 10 ஆடுகள் மா்மான முறையில் உயிரிழந்தன.

செங்கத்தை அடுத்த பிஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆடு மேய்க்கும் தொழிலாளி சுப்பிரமணி (50). இவா், தனது ஆடுகளை வழக்கம் போல, அரட்டவாடி அருகே வனப் பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, 10 ஆடுகள் ஒன்றன் ஒன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்தன. மேலும் சில ஆடுகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.ஆடுகள், வன விலங்குகளுக்கு ரசாயன பவுடா் கலந்து வைத்த தண்ணீரை குடித்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தொழிலாளி சுப்பரமணி செங்கம் காவல் நிலையத்திலும், வருவாய்த் துறையினரிடமும் புகாா் அளித்துள்ளாா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!