செங்கம் சுற்றுவட்டார அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஆன்லைன் தேர்வில் பங்குபெற்று சிறப்பு மதிப்பெண்கள் பெற்று சாதனை..

செங்கம் சுற்றுவட்டார அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஆன்லைன் தேர்வில் பங்குபெற்று சிறப்பு மதிப்பெண்கள் பெற்று சாதனை..

திருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் சுற்றுவட்டார அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஆன்லைன் தேர்வில் பங்குபெற்று சிறப்பு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.

144 ஊரடங்கு அமல் அமலில் உள்ள நிலையில் வீட்டில் எல்லோரும் முடங்கி கிடக்கின்றனர். இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர்கள் ஊக்குவிக்கும் விதமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தொலைநோக்குப் பார்வையில் மாணவர்களின் கற்கும் திறனையும் மற்றும் பொது அறிவு திறனையும் மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்குபொது அறிவு சார்ந்த சிறு தேர்வு ஒன்றை ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்து வரும் அனைத்து மாணவர்களும் பங்கு பெற்று இணையதளம் வாயிலாக நடத்திட கல்வித்துறைக்கு அறிவுறுத்தலின் பெயரில் இந்தத் தேர்வானது அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் பங்கு பெற்றனர் இந்தத் தேர்வு ஆன்லைன் தேர்வு வீட்டிலிருந்தபடியே நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள் செல்வம் ஆலோசனையின்படி செங்கம் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி , கோவிந்தராஜ் ஆலோசனையின் படியும் பெரும்பான்மையாக அரசு நடுநிலைப்பள்ளியில் பங்குபெற்றனர், அவற்றில் சிறப்பான மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். பள்ளி மாணவர்கள் தேர்வினை ஏற்படுத்தி தந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!