கலசப்பாக்கம் பகுதியில் சமூக இடைவெளி பின்பற்றி ஏழை, எளிய மக்களுக்கு திமுகவினர் நிவாரண உதவிகளை வழங்கினர்..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் முன்னூர்மங்கலம், மேல் முடியனூர், ஒரந்தவாடி, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
144 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளது. இதனால் என் எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் ,திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ. வேலு அவர்களின் ஆலோசனையின் கலசபாக்கம் தொகுதி பொறுப்பாளர் எ.வ.வே. கம்பன் மற்றும் புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் ஆகியோர் 15 நாட்களுக்கு தேவையான காய்கறி, மளிகை மற்றும் நிவாரணப்பொருட்கள் பொருட்கள் இலங்கை முகாமை சேர்ந்த 55 குடும்பங்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், பேரூராட்சி செயலர், மாவட்ட கவுன்சிலர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்


You must be logged in to post a comment.