செங்கம் காவல்துறையின் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..

செங்கம் காவல்துறையின் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் துறையின் சார்பில் பொதுமக்களிடத்தில் கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்த புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் ராட்சத ஓவியம் வரையப்பட்டன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு விழிப்புணர்வு முன்னச்செரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து செங்கம், தண்டராம்பட்டு, புதுப்பாளையம், கலசபாக்கம் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர அனாவசியமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியும் அதையும் மீறி மோட்டார் சைக்கிள்களில் சிலர் சாலையில் சுற்றித்திரிகிறார்கள்.

இவர்களை எச்சரிக்கும் விதமாக பொதுமக்கள்ளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் அதிகமாகக் கூடும் பகுதியான புதிய பேருந்து நிலையம் அருகே பெங்களூர் நெடுஞ்சாலையில் செங்கம் காவல்துறையின் சார்பில் சார்பில் கரோனா வைரஸ் உருவப்படமும், தனித்திரு, விழித்திரு, வீட்டில் இரு, நலமாக இரு, கரோனாவை ஒழிப்போம் என்று வாசங்களும், முககவசம் அணிவோம், கைகழுவுவோம், நம்மைக் காப்போம், நாட்டை காப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்த விழிப்புணர்வு ஓவியத்தை செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையில், செங்கம் காவல் துறை ஆய்வாளர் சாலமன் ராஜா, காவல்துறை யினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த பிரம்மாண்டமான ஓவியம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!