ஜவ்வாது மலையிலிருந்து வெளியூருக்கு கள்ளச்சாராயம் கடத்திய 10 பேர் அதிரடி கைது..!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஜவ்வாது மலையிலிருந்து வெளியூருக்கு கள்ளச்சாராயம் கடத்திய 10 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்
ஜவ்வாது மலையில் இருந்து ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கள்ளசாராயம் கடத்தி சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர் 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட துணை கண்காணிப்பாளர் சேகரன் தலைமையில் ஜமுனாமரத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன் ,முருகன் சிறப்பு இன்ஸ்பெக்டர் லட்சுமி நாராயணன், தனிப்பிரிவு போலீசார் விஜய் உள்ளிட்ட போலீசார் நள்ளிரவு அமிர்தி அருகில் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மலை கிராமங்களில் மலை கிராமங்களில் சாராயம் வாங்கிக் கொண்டு அதனை பைக்கில் கடத்தி வந்த 11 பேரை போலீசார் மடக்கினர். அதில் ஒருவன் தப்பி ஓடினான் இதையடுத்து ஆரணியை சேர்ந்த உமாபதி 37, பாஸ்கரன் 27, மணிகண்டன் 25 சிவா 32 ,மோகன எஸ்வரன் 24, கணேசன் 45, மற்றும் வாலாஜாவில் சேர்ந்த விநாயகம் வேலூரை சேர்ந்த ராஜேஷ் பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்த திருமலை உட்பட 10 பேர் பிடிபட்டனர் அவர்களிடம் கடத்தி வந்த 250 லிட்டர் கலசங்களுடன் பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய 11 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்


You must be logged in to post a comment.