செங்கம் அடுத்த ஜவ்வாது மலையில் காட்டு யானை சேதமாக்கிய 5 குடிசைகளுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பி. பன்னீர்செல்வம் நிவாரண உதவி வழங்கினார்.
ஜவ்வாது மலையில் காட்டு யானை எடுத்த 5 குடிசை வீடுகளில் உரிமையாளர்களுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பி பன்னீர்செல்வம் நிவாரண உதவி வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஒன்று உலா வந்து கொண்டிருந்தது. இரவு நேரங்களில் உணவு தேடிச் செல்லும்போது குடிசை வீடுகள் பலா மரங்கள், நெல்வயல், ஆகியவற்றை சேதமாகி வருகின்றன. மாட்டுக்கானூர்,சிந்லூர் ஆகிய கிராமங்களில் 5 குடிசை வீடுகளை இந்த யானை இடித்து தள்ளி சேதம் ஆக்கியது .அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தனது சொந்த பணத்தில் தலா 5 ஆயிரம் மற்றும் அரிசி மளிகை பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஜமுனாமரத்தூர் தாசில்தார் வெங்கடேசன், யூனியன் தலைவர் ஜீவா , ஊராட்சிஒன்றிய ஆணையாளர்கள் சக்திவேல், ஆனந்தன், வனசரக அலுவலர் குணசேகரன் கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்


You must be logged in to post a comment.